Monday, March 8, 2010

மாத்தி யோசி - 23ம் எலிகேசி!!!

அமைச்சர்:  அரசே! வாருங்கள் காட்டுக்குள் வேட்டைக்கு செல்லலாம்!
அரசன்:  ஏன்? நான் உயிரோட இருக்கிறது தங்களுக்குப் பிடிக்கவில்லையா?



அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் போர் எடுத்து வந்து நிற்கிறான்!
அரசன்: அடடடா! அவன் தொல்லை தாங்க முடியவில்லை. "அரசர் ஓய்வு எடுக்கிறார். போய் விட்டு நாளை வாருங்கள்" என்று சொல்லிஅனுப்புங்கள்.



அரசன்: நாட்டில் மழை பொழிந்ததா?
அமைச்சர்: இல்லை.
அரசன்: என்னது இல்லையா? நேற்றைக்கு தானே மழை பொழிந்தது!
அமைச்சர்: அதான் தெரியுதில்லே ! அப்பறம் எதுக்கு சும்மா சும்மா கேள்வி கேட்டு தொல்லை செய்கிறீர்கள் அரசே!



அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் நம் மீது போர் எடுத்து நிற்கிறான்!
அரசன்: நன்றி கெட்டவன்! போன மாசம் தானே காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்டேன். அதற்குள் என்ன அவசரம்?



அமைச்சர்: மன்னா! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன்...

அரசன்: நிறுத்துங்கள் அமைச்சரே போதும்! செலவுக்கு பணம் வேண்டும் என்று நேரடியாக கேளுங்களேன்!



அமைச்சர்:  அரசே! காவிரியில் வெள்ளம்!

அரசன்:  அப்பாடா ஒருவழியாக! எல்லா வெல்லத்தையும் டப்பாக்களில் அடைத்து சர்க்கரையாக விற்று விடுங்கள்!

அமைச்சர்: அரசே! சர்க்கரை வெல்லம் இல்லை. இது ஆற்று வெள்ளம்!

அரசன்:  ஓ! ஆற்று வெள்ளமா? பரவாயில்லை! படகுகளை வைத்து சர்க்கரை டப்பாக்களை எடுத்து வாருங்கள்!

அமைச்சர்:  அடடடடா...!!! 




அமைச்சர்: அரசே ! இனிமேல் இரவில் நகர் வலம் செல்லும் போது வழக்கமாக போடும் மாறுவேடம் போட்டு செல்லாதீர்கள்!

அரசன்: ஏன் அமைச்சரே!

அமைச்சர்: உங்களின் மாறுவேடப் படத்தை போஸ்டர் அடித்து ஒட்டி "கொடிய தீவிரவாதி இரவில் நடமாட்டம்! அடித்துக் கொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு" என்று யாரோ உங்களுக்கு வேண்டாதவன் விளம்பரம் செய்துள்ளான் அரசே!




அமைச்சர்: அரசே! எதிரி நாட்டு அரசன் போர் எடுத்து வந்து நிற்கிறான்!

அரசன்: சனி, ஞாயிறு வார விடுமுறை ஆயிற்றே! இன்றைக்கு ஏன் வந்தான்?





அரசன்: அய்யோ! தளபதி எங்கே அமைச்சரே? பக்கத்து நாட்டு அரசன் நம் கோட்டை முன்னே படை எடுத்து வந்து நிற்கிறான்!


அமைச்சர்: பதறாதீர்கள் மன்னா! "அரசர் தினம்" கொண்டாட நம் வீரர்கள் தாம் இப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்.
அங்கே நிற்பது பக்கத்து நாட்டு அரசன் இல்லை.அவன் தான் நம் நாட்டு தளபதி!!! அந்தப்புரமே கதி என்று கிடக்காமல்,atleast அரண்மனை அதிகாரிகளையாவது தெரிந்து வைத்து கொள்ளுங்கள்!





அரசன்: அமைச்சரே! நான் என்ன 'பைக்'கா ஓட்டுகிறேன்? அப்பறம் எதற்கு இந்த ஹெல்மெட்?

அமைச்சர்: அரசே! கண்ணாடி போட்டு பாருங்கள். இது ஹெல்மெட் இல்லை. கிரீடம்!





அரசன்: தளபதியாரே! நம் யானை படையை விட குதிரை படை ஏன் அதிக எண்ணிக்கையில் உள்ளது?

தளபதி: புற முதுகிட்டு ஒடும் போது, யானைகளை விட குதிரைகள் தான் வேகமாக ஓடும் அரசே!

அரசன்: பலே பலே ! என் தளபதி ஆச்சே!

No comments:

Post a Comment