Friday, March 5, 2010

நம்மில் வாழும் நித்யானந்தம்!



சாமியார் என்பதை சற்று தள்ளி வையுங்கள். ஒரு மனிதன் என்று நினைத்துப் பார்த்தால் அவனுக்கு எல்லா உணர்ச்சியும் இருக்கும்,அதை கட்டுப்பாட்டில் வைப்பவன் சமூகத்தில் வாழத் தகுதி கொண்டவன். கட்டுப்பாடு இழந்தவன் கலாச்சார வாழ்க்கையை மனிதன் பின்பற்ற தொடங்கும் முன் பிறந்திருக்க வேண்டியவன். தப்பி இப்போது பிறந்திருப்பதால் அவன் மனித மிருகம். தவறு செய்யும் இவர்கள் எல்லோரும் சமூக வாழ்க்கைக்கு தகுதி இழப்பதால் தான் 'தள்ளி வாழுங்கள் தம்பிகளா..' என்று சிறை என்ற ஒரு முறையே வந்தது.

இவை இருக்கட்டும்.உலகில் சில மனிதர்கள் கண்டிப்பாக அடுத்தவரிடம் இருந்து வேறுபடுகிறார்கள். ஒட்டு மொத்த இனத்துக்கே நன்மையோ தீமையோ வரும். அதாவது ஒட்டு மொத்த மனித குலத்தையும் பாதிக்கும் ஆற்றல் சிலருக்கு உண்டு. அவர்கள் எப்படியாவது வருவார்கள்.வளர்வார்கள். சாதிப்பார்கள். பாதிப்பார்கள். சாவார்கள். எடுத்துக் காட்டு கேட்டால்..அறிவியல் மேதைகள் அனைவரையும் சொல்லுவேன்.

அதாவது சிலருக்கு கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிந்து வாழும் சராசரி வாழ்க்கை அவர்களைத் திருப்தி படுத்தாது. நம் பாரதி சொன்னானே... "நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரை என பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!". பாரதிக்கு நாம் எல்லோரும் வாழும் சராசரி வாடிக்கை வாழ்க்கை "வேடிக்கை"யாகத் தெரிகிறது. "எப்படிடா எதாவது சாதிக்காம வாழுறிங்க..?  பயங்கர காமெடியா இருக்கே!" என்று கோடிகளில் சில நாடிகளுக்கு மட்டுமே தோன்றும்.அவர்களாலேயே இந்த பிரபஞ்சம் பயன்பட்டிருக்கிறது. பாடாய் படுத்தப்பட்டும் இருக்கிறது.

சரி! அவர்களில் ஒருவர்களா...நம்மால் 'வாழும் இறைவன்' என்று வர்ணிக்கபடும் இந்த காவி தறித்த மனிதர்கள்? ஆசா பாசங்களுக்கு அப்பாற் பட்டவர்களா இவர்கள்! இவர்களில் எண்ணம் மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால்..காவி உடை எதற்கு? 'லைஃப் பிலிஃப் ஃபவுண்டேஷன்' என்று ஏதோ ஒரு அமைப்பை நிறுவி, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியது தானே! அம்பானிகள் அப்படி ஆரம்பித்தால் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து நல்லது செய்யலாம். இங்கே வாழ வழி இல்லாத சில கலவாணிகள் மறு வாழ்வு மையங்கள் (அவர்களுக்கு)  ஆரம்பிப்பது தான் மையப் பிரச்சனையே!

சரி! அவன் ஏதாவது பன்றான். நாம் சும்மா இருக்கிறோமா?  ஒருவனுக்கு எதோ ஒரு வித்தை இல்லை இல்லை சக்தி என்றே கொள்ளலாம்..சக்தி இருப்பின்.."சாமி எனக்கும் உங்க சக்தியால நல்லது பண்ணுங்க சாமி!" என்று சுற்றுகிற கூட்டம் தானே ஒவ்வொரு மடாதிபதிகளின் அடியிலும் மடையர்களாக கிடக்கிறது. யாராவது ஒருவர் "சாமி.. இந்த நாட்டுக்கு நல்ல தலைவரா வரனும்! தார் பாலை வனம் பூங்காவா மாறனும்!" பொது நலத்தோடு அவர்களிடம் கேட்டிருப்போமா? இல்லவே இல்லை.. "எனக்கு வேலை கிடைக்கணும்..விசா கிடைக்கணும்.. அருள் பண்ணுங்க சாமி" என்று நம் வாழ்க்கையை முற்றிலும் மாற்றக் கூடிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் துளி கூட சம்பந்தமில்லாத அவர்களிடம் போய் அனுமதி கேட்கிறோமே? இது நம்மையே நாம் ஏமாற்றுவது ஆகாதா? யோசித்தால்... பாரதி சொன்ன "வேடிக்கை வாழ்க்கை" இது தானோ?


கிளிகளோ, சில மனிதர்களின் பார்வைகளோ, கிரகங்காளோ நம் வாழ்க்கையைத் தீர்மாணிப்பதில்லை. நாமே நம் வாழ்க்கையைத் தீர்மாணிக்கிறோம். கடவுள் இருக்கிறார் என்று நீங்களும் நினைத்தால், எதாவது செயல்கள் செய்யும் போது, நமக்கு ஒரு உந்து சக்தி வேண்டும் என்பதற்காக, இருந்த இடத்தில் இருந்து கொண்டே மனதிற்குள் கடவுளை நினை. உனக்கும் கடவுளுக்கும் இடையில் எதற்கு ஒரு எட்டப்பன் இடையப்பனாய்? அவனை எப்படி கடவுள் விரும்புகிறாரோ அப்படியே உங்களையும் விரும்புவார். அவர் உங்கள் ரெசூமை படித்து விட்டா அருள் தரப் போகிறார்? இல்லை சாமியாரின் சிபாரிசின் பேரில் வரம் தரப் போகிறாரா? நம் எல்லோருக்கும் அவர் சமம். இதில் எதற்கு வர்க்க வேறுபாடு? உண்டியலில் அதிகம் போடுவதால் அவர் நன்மை அதிகம் செய்தால் அவர் லஞ்சம் வாங்குவது போல ஆகாதா?  எங்கோ ஆரம்பித்து எங்கோ எந்தக் கட்டுரை போகிறது? பரவாயில்லை. நினைப்பதைக் கொட்டத் தானே இந்த பக்கமே.

சாமியை நம்பு! சாமியார்களைப் பற்றி நமக்கு கவலை வேண்டாம்! அவர்களும் நம்மைப் போல மனிதர்கள் தான். நம் வாழ்க்கை நம் கையில்!  நம் முடிவில்! நம் தில்லில்! நம் திடத்தில்! நம் அறிவில்! நம் உழைப்பில்!

நிற்க! நித்தானந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையை இப்படி அவலப் படுத்தி இருப்பது அசிங்காமாயிருக்கிறது. விசாரனை செய்து.. அவர் யாரையும் நிர்பந்திக்கவில்லை. யாரையும் கட்டுப் படுத்தவில்லை என்றால்.. இதில் ஒன்றும் தவறே இல்லை.படக் காட்சியில் வந்தது. ஒன்றும் கற்பழிப்பு இல்லையே! அந்த பெண்ணின் ஓப்புதலோடு நடந்திருக்கிறது. இதில் அடுத்தவருக்கு என்ன அவ்வளவு கோபம்? ஆராய்ந்து பார்த்தால் எல்லோர் வீட்டின் படுக்கை அறையும் அப்படித் தானே. அதைப் படம் பிடித்து அம்பலப் படுத்தியது அசிங்கம் என்றே சொல்வேன்.


அவரது மடங்களில் ஏதாவது தவறான செயல்கள் நடந்திருந்தால், அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவர் படுக்கையறையில் இப்படி இருந்தார் என்பது அநாகரீகம்! அவரைக் "நடமாடும் கடவுள்' என நினைத்தது நம் தவறு! இப்போது அவர் "நடமாடும் மனிதன்" என்று தெரிந்ததும் கோபப்படுவதும் நம் தவறு!


இந்தச் செய்தி கேள்விபட்டவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி? Who is that black sheep? அவரின் படுக்கை அறை வரை செல்லும் ஏதோ ஒரு குள்ள நரி பணத்திற்காக இப்படி செய்துள்ளதே?

யாருப்பா அங்கே சத்தமா படிக்கிறது...தீதும் நன்றும் பிறர் தர வாரா!..ன்னு! இன்னும் சத்தமா படிப்பா...!

5 comments:

Unknown said...

லெனின்...! நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். தண்டிக்கப்படக்கூடிய செய்கை இல்லை இது. அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய செய்கையும் இல்லை இது. இந்த மாதிரியான ஆட்கள் சாமியார்கள் என்று சொல்லிவிட்டு இப்படி செய்வதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் அவர்களை கடவுள்களாக ஏற்றுக் கொண்ட நம்மை என்ன செய்வது?

ராம்ஜி_யாஹூ said...

in your 1st sentence itself the post is over. If he is a normal human being or a yogaa trainer or a meditation trainer alone, we will not waste our time.
Since he has told that he is a saint (sanyasi), we say it is a sin.

லென்ராம் said...

Hi Ramadurai,

Thanks for your reply. I hope people will not follow some stupid guys calling themselves as saint. This is a good lesson for us.

லென்ராம் said...

Hi Ramji,
Thanks for your reply.
Even if he is a saint, he has his personal life. What I am trying to convey is even if he had, that is his personal life. Even if he claimed himself as a saint,its our fault to believe it.

Jayadev Das said...

சாமியார்களிடம் போகிறவர்களுக்கு சுய நலத்திற்க்காத்தான் போகிறார்கள் பொது நலமில்லை.- இது உண்மை. அதே சமயம் அதைப் படம் பிடித்தவனுக்கு சுயநலம், அந்த செயல் தவறு என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே உள்நோக்கத்தோடு சாமியாரின் அஜால் குஜால் வேலைகளை படம் பிடித்திருந்தாலும் அந்த செயல் மக்களிடம் அந்த சாமியாரின் சுய ரூபத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது அல்லவா? இல்லாவிட்டால் இன்னும் சில வருடங்களில், அந்த சாமியார் மண்டையைப் போட்ட பின்பு அவனுக்கு கோவில் கட்டி கடவுளாக்கி விடமாட்டார்களா? அந்தக் கொடுமையிலிருந்து லெனின் [படமெடுத்தவர்] நம்மைக் காப்பாற்றியுள்ளார் அல்லவா? சாமான்யன் ஒருத்தன் இந்த வேலையைச் செய்திருந்தால் அதைப் படம் பிடிப்பது தவறுதான், ஆனால் இங்கு அப்படி இல்லையே, எல்லோரும் பிரம்மச்சாரியத்தைக் கடை பிடியுங்கள் என்று சொல்லி கயவானித் தனம் செய்த ஒருத்தனை அல்லவா படம் பிடித்தார் லெனின்? அப்படிப் படம் பிடித்துக் காண்பித்தும், சாமியார் ரொம்ப நல்லவன் என்று அவன் பின்னால் செல்லும் ஆட்டு மனதை கூட்டம் இன்னமும் இருக்கிறதே? தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள நினைக்காத மக்களாவது திருந்தட்டுமே?

Post a Comment