Friday, May 28, 2010

ராவணன் ஒரு முன்னோட்டம்

 

 
மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு ஓடோடி வந்து முழுப் பாடலையும் கேட்க (முடியா)மல் அடுத்த அடுத்த பாடல்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் முதல் பாடலிலிருந்து அமைதியாகக் கேட்டுப் பார்த்தேன்.எதிர்பார்ப்புகள் எக்கச் சக்கமாய் இருக்கும் போது, ஏஆர் ரகுமான், வைரமுத்து, மணி ரத்ணம் கூட இந்த ஏழை ரசிகனை இப்படி ஏமாற்றி விட்டார்களோ என்பதை நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

வைரமுத்தா அது? கோடை வெயிலில் தண்ணீருக்குத்தான் பஞ்சம் வர வேண்டும். எப்படி கவிதைக்கு, கற்பனைக்கு வந்தது? "ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்" இப்படி அருமையாய் யாரோ சாதாரணமாய் எழுதி விட்டுப் போகும் போது, வைரமுத்துவிடம் நான் எதிர் பார்த்தது தப்பா? 6 பாடல்களில் எனக்குப் பிடித்த ஒரே வரி "அக்னிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் உன்னை சுவைக்க என் நாக்கு துடிக்குதடி" என்ன? இதுதாங்க எனக்குத் தெரிந்த நல்ல வரி. சில இடங்களில் கற்பனைக்கு ஏன் விலங்கு? "ராமன்னா ராமன். ராவணன்னா ராவணன்". இப்படி சொன்னதற்குப் பதில் 'இதனால் நான் ராமன். இதனால் நான் ராவணன். இவைகளால் நான் "ராணன்" என்று சொல்லி இருக்கலாம். அடுத்து, தேக்கு மரம் நான். தீக்குச்சி நீ. காதல் தீ. புளித்துப் போன அடச் சீ.

மெல்லினத்தில் ரம்யமாய் வல்லினம் கண்ட "அழகான ராட்ஷசி" திரிந்து  "காட்டுச் சிறுக்கி" எனும் போது வல்லினத்தில் பயங்கரவாதம் கண்டது போல் உள்ளதே ! ."சினேகிதனே ரகசிய சினேகிதனே" எனும் போது பார்த்த ஒரு நெருக்க உறவு "கள்வரே கள்வரே" எனும் போது தள்ளிப் போய் உள்ளதே! பாடல் வரிகள் அனைத்துமே மொழி பெயர்ப்புப் பாடல்கள் மாதிரி இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம். ஒரிஜினாலிட்டி தேடி தேடி ஒரிஜினல் ஒரு ரூபாய் சட்டி கூட கிடைக்கவில்லை.

ஏஆர்ஆர் தமிழை விட்டு தள்ளிப் போகிறாரா? இல்லை ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு கொண்டு வருகிறாரா? இல்லை அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் குழம்பிப் போய் இருக்கிறாரா? அவருக்கே வெளிச்சம். ரோஜா இந்திய முதல்வன் ஜென்டில்மேனை நாம் இழந்து விட்டோமோ என்று என் நெஞ்சம் பதறுகிறது! "உசுரே போகுதே" பாடல் தான் எனைக் கவர்ந்த அருமையான பாடல். அடுத்து "வீரா.. தீரா..சூரா.. பேரா" (ஒரே அக்கப்போரா) பாடல்.காதல் படத்தில் வரும் "ஆட்டுக் கறி" பாடலைக் கேட்டால் இந்தப் படத்தில் வடும் "கெடா வெட்டி" பாடல் இஞ்சி, பூண்டு பத்தாத,மசாலாப் பட்டைப் போடாத கறிக் குழம்பு தான்".

அனுராதா ஸ்ரீராமின் குரலில் ஏன் இப்படி ஒரு கூர்மை? கீச்சுக் குரலில் ஒரு காச்சு காச்சிவிட்டார்.

எல்லாப் பாடல்களையும் கேட்ட பிறகு... நான் முன்பு சொன்னது போல தொலைவில் இருந்து "உசுரே போகுதே வீரா" பாடிக் கொண்டே இருப்பது தான் ஏஆர் ஆரின் வெற்றியோ?

"நாயகியை நாயக ராவணன் கடத்துகிறான். ராமன் தவிக்கிறான். மீண்டு வந்து துப்பாக்கியால் ஐசை மீட்கிறான்". இது தான் கதை பாருங்கள். "காதல் ரோஜாவே" என்று இதே சந்தர்ப்பத்தில் பாடுவதற்குப் பதிலாக "உசுரே போகுதே " என்று இப்போது பாடப் போகிறார்கள்.

ஆனால் என்ன.. (மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்)^ 100 டு தெ பவர் ஆஃப் 100 முறை கேட்டு விட்டு நானே இந்தப் பாடல்களையா குறைச் சொன்னேன் என்று ஒருவேளை இன்னும் 3 மாதம் கழித்து சொன்னாலும் சொல்வேன்.பழக்கப் பட்டப் பிறகு பேயும் கடவுளாமே!

கேட்டு விட்டு, ஏதேனும் நல்ல வரிகள் இருந்தால் நீங்களும் பகிருங்கள்.

3 comments:

venkatapathy said...

காட்டு சிருக்கி பாட்டு , உசுரே போகுதே பாட்டு , கோடு போட்டா எல்லாம் ஒரு டப்பிங் என்ற வட்ட்துக்குள் எழுதியதில் வைரமுத்து best.

லென்ராம் said...

உங்கள் கருத்துக்கு நன்றி கடவுளே. ஆனால் ராவணன் ஒன்றும் டப்பிங் படமில்லை. இதே போன்று மணி ரத்னம் "உயிரே" "தில்சே" எடுக்கும் போது பாடல்கள் என்னமாய் இருந்தன!

rushanth bose said...

எதும் பார்தனயே பிடிக்காது பார்க்க பார்க்க தான் புடிக்கும்

Post a Comment