Saturday, March 6, 2010
இன்னும் காதலிக்கவில்லையா?
இதுவரை யாரையும் காதலிக்கவில்லையா?
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்!
காதல் உலகம் சிறு உலகம் - எந்நேரமும்
காதலியை நினைத்து உங்களின்
கற்பனைக்குக் கடிவாளம் போடாதீர்கள்!
காதல் என்பது கையளவு தான்!
மற்றவை தான் உலகளவு!
காதல் கூண்டை விட்டு வெளியே வாருங்கள்!
ஆச்சரிய விஷயங்கள் ஆயிரம் இருக்கின்றன!
புற்களோடு பேசுங்கள்!
எறும்புகளோடு கூடவே ஓடுங்கள்!
ஒருநாள் விருந்துக்கு வரவா? - என்று
யாருக்கும் தெரியாமல் அதன் காதுக்குள் ஓதுங்கள்!
பூத்திருக்கும் பூக்களை எல்லாம், மெல்ல மெல்ல தொட்டு
'கூச்சமாக இருக்கிறதா?' - என்று கேளுங்கள்!
சாமி சிலைகளின் கைகளில் கற்பூரத்தைக் கொளுத்தி
'சுடுகிறதா?' - எனக் கேளுங்கள்!
பூவுக்கே தெரியாமல் அதன் தேனைக் குடியுங்கள்!
அதற்கு வண்ணத்துப் பூச்சியிடம் அதன் வாயை
வாடகைக்குக் கேளுங்கள்!
அங்கே பறந்து வரும் பறவைகளை எல்லாம்
'பத்தினியா?' - எனக் கேளுங்கள்!
'ஆம்' என்று சொன்னால்
ஐந்தாறு பழங்களை அள்ளிக் கொடுங்கள்!
'இல்லை' என்று அவைகள் சொன்னால்
அருகிலிருக்கும் இந்தியப் பெண்ணை
கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள்!
கண்ணகிகளின் சொல்லைக் கேட்டு
கற்புடன் வாழட்டும்!
குயில்களே உங்களைப் பாராட்டும்படி
அதனோடு சேர்ந்து கூவுங்கள்!
கொசுக்களின் கால்களுக்கு கொலுசுகளை மாட்டுங்கள்!
ஓணான்களின் இடுப்புகளுக்கு ஒட்டியாணம் போடுங்கள்!
முடிந்தால் அம்மாவின் வயிற்றுக்கே சென்று
இந்த முறை, வலியே கொடுக்கமால் வெளியே வாருங்கள்!
வந்தவுடன் எப்போதும் அழாமல்
எல்லாருக்கும் புதிராக ஒரு புன்னகையைத் தூவுங்கள்!
'மைனா'விடம் சென்று அதன் 'நயினா' நலமா? எனக் கேளுங்கள்!
கிளியின் இடுப்பைத் தொட்டு கிச்சு கிச்சு மூட்டுங்கள்!
படித்தால் புரியாத கடினமான புத்தகங்களை
கம்பளி பூச்சியை விட்டுக் கடிக்க விடுங்கள்!
கடித்து முடித்தபின், தடித்த இடங்களில் சொரிந்து விடுங்கள்!
பெட்டை கோழிகளுக்கென்றே ஒரு 'ஃபேஷன் ஷோ' நடத்துங்கள்!
அப்போது சேவல்களை காவல் செய்யுங்கள்!
கோழிகளோடு சேர்ந்து குப்பையைக் கிளறுங்கள்!
என்னதான் தின்கின்றன? - என இப்போதாவது பாருங்கள்!
மாடுகளிடம் சென்று 'அம்மா'வை விடுத்து
'அப்பா' என கத்தச் சொல்லி அடம் பிடியுங்கள்!
'எதிரி துரத்துகிறான். ஒளிந்து கொள்ள இடம் வேண்டும்'
என ஒருவருக்கும் தெரியாமல் எறும்புகளிடம் கூறுங்கள்!
அதன் பின்னால் ஒளிந்து நின்று,
அதன் முதுகை முகர்ந்து பாருங்கள்!
தாங்க முடியாத வாடை வந்தால், அதன் மேல் தண்ணீரைத் தெளியுங்கள்!
மாறாக,
நறுமணம் வந்தால் மறுகணமே பாண்டிய மன்னனிடம் சென்று
பட்டி மன்றன் நடத்துங்கள்!
'இந்த மணம் இயற்கை மணமா? அல்லது செயற்கை மணமா?' - என்று!
இத்தனையையும் நீங்கள் ரசிக்க முடிந்தால்,
ரசனையுடைய நீங்கள் தான் காதலிக்கத் தகுதியானவர்கள்!
ஏனென்றால்,
காதல் என்பது ஒரு கலை!
ரசனை உள்ளவர்கள் ரசித்தால் தான் அதன் வாசனை புரியும்!
எனவே,
ரசனையுடைய நீங்கள் இப்போது
சென்று இயன்றவரை காதலியுங்கள்!
இதோ... இதோ....
நான் காதலிக்கப் புறப்பட்டுவிட்டேன்!
நீங்கள்........?
Subscribe to:
Post Comments (Atom)


6 comments:
இயற்கையின் மீது அளவற்ற காதல் கொண்டவரோ தாங்கள்?
கடை நிலை ரசிகரே...பின்னூட்டதிற்கு நன்றி. இயற்கையை என்னோடு சேர்ந்து ரசித்ததற்கும் நன்றி.
நீங்கள் சொன்ன அனைத்தையும் ரசித்துவிட்டுத் தான் காதலிக்க போக வேண்டுமா? இல்லை.... உடனேயே காதலிக்க போய் விடலாமா? ஹி..ஹி.. ஹி.
//'மைனா'விடம் சென்று அதன் 'நயினா' நலமா? எனக் கேளுங்கள்!
கிளியின் இடுப்பைத் தொட்டு கிச்சு கிச்சு மூட்டுங்கள்!//
ungalin adhidha karapanaiku paaraattukkal.
unga kavidhai ethaarthama superaa iruku.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அஷீதா!
Post a Comment